செய்திகள்,திரையுலகம் எடிசன் திரைப்பட விழாவில் ‘நான் சிவப்பு மனிதன்’!…

எடிசன் திரைப்பட விழாவில் ‘நான் சிவப்பு மனிதன்’!…

எடிசன் திரைப்பட விழாவில் ‘நான் சிவப்பு மனிதன்’!… post thumbnail image
சென்னை:-மலேசியாவில் உள்ள மலாக்கா மாநிலத்தில் வருகிற அக்டோபர் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. மலாக்கா தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். ஆண்டு தோறும் இங்கு நடக்கும் எடிசன் சர்வதேச திரைப்பட விழா மலேசியா நாட்டின் மிகப்பெரிய திரைப்பட விழாவாகும். இதில் இந்த ஆண்டு நான் சிவப்பு மனிதன் படம் திரையிடப்படுகிறது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் யுடிவி தனஞ்செயன் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

விஷால், லட்சுமிமேனன் நடித்த இந்தப் படம் கமர்ஷியல் ஆக்ஷன் படமாக இருந்தாலும் நார்கோலெப்ஸி எனப்படும் தூக்க வியாதி தொடர்பான படம் என்பதால் திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நான் சிவப்பு மனிதனை திரு இயக்கி இருந்தார். படம் கமர்ஷியலாக சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி