செய்திகள்,திரையுலகம் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் சம்பளம் ரூ.50 கோடி!…

நடிகர் ஹிருத்திக் ரோஷனின் சம்பளம் ரூ.50 கோடி!…

நடிகர் ஹிருத்திக் ரோஷனின் சம்பளம் ரூ.50 கோடி!… post thumbnail image
மும்பை:-நடிகர் ஹிருத்திக் ரோஷனின் நடிப்பில் நவம்பரில் வெளியாக இருக்கும் படம் பேங் பேங். இந்தப்படத்திற்கு அடுத்தப்படியாக ஹிருத்திக், மொகஞ்சதரோ படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் சுமார் ரூ.50 கோடியாம். அப்படி அவருக்கு ரூ.50 கோடி கொடுக்கும் பட்சத்தில், இந்தியில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஹிருத்திக் ரோஷனும் இணைந்து விடுவார். ஏற்கனவே இந்தப்பட்டியலில் ஷாரூக், அமீர், சல்மான் ஆகியோர் உள்ளனர்.

இதுப்பற்றி ஹிருத்திக் ரோஷனிடம் கேட்டால், என் படத்தின் லாபங்களை பொறுத்து நான் சம்பளம் நிர்ணயிக்கிறேன், அது எனது தொழில் சம்பந்தப்பட்ட விஷயம் என்கிறார். இதனிடையே பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோகர், சல்மான் கான் மற்றும் அமீர் கானுக்கு ரூ.150 கோடி வரை சம்பளம் தர முன்வந்துள்ளது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளார் கரண் ஜோகர். ஆனால் இதுப்பற்றி அமீரும், சல்மானும் வாய்திறக்காமல் அமைதியாக இருக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி