செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் கறுப்பு பண விவகாரம்: பாராளுமன்ற குழு ஆய்வு!…

கறுப்பு பண விவகாரம்: பாராளுமன்ற குழு ஆய்வு!…

கறுப்பு பண விவகாரம்: பாராளுமன்ற குழு ஆய்வு!… post thumbnail image
புதுடெல்லி:-வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்பு பணத்தை மீட்டு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த மே மாதம் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து உள்ளது. இந்த குழு கணக்கில் வராத பணம் தொடர்பாக விசாரணை குழுவுக்கு ஏற்கனவே சில சிபாரிசுகளை வழங்கி இருக்கிறது.

இந்நிலையில், பாராளுமன்ற நிதிக்குழு கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதற்காக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், கறுப்பு பணத்தை தடுப்பது போன்றவை குறித்து ஆய்வு செய்ய தீர்மானித்து இருக்கிறது. நிதி நிறுவன மோசடிகள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட இருப்பதால், அது தொடர்பான விவரங்களை அளிக்கக்கோரி நிதி அமைச்சகம், கம்பெனிகள் விவகார அமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி, பங்கு பரிவர்த்தனை அமைப்பு ஆகியவற்றுக்கு ஏற்கனவே நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி