செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்!…

ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்!…

ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்!… post thumbnail image
மும்பை:-பிரபல சான்டிஸ்க் பிராண்டு, 512 ஜி.பி. கொள்ளவு உடைய ஹை கெப்பாசிட்டி மெமரி கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் காமிராக்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த எஸ்.டி. கார்டு ஒரு நொடிக்கு 90 எம்.பி. அசுர வேகத்தில் டிரான்ஸ்பர், காப்பி செய்யும் திறன் கொண்டது. 4 ஆயிரம் பிக்சல்களுக்கும் மேலுள்ள உயர்தர எச்.டி. கேமிராக்களில் எடுக்கப்படும் படங்களை பாதுகாப்பாக சேமிக்கும் வகையில் உயர்தர தொழில்நுட்பத்தில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ரூ.9,700-க்கு 64 ஜி.பி. மெமரி கார்டை அறிமுகப்படுத்தியிருந்த சான்டிஸ்க் இப்போது முதல் முறையாக 512 ஜி.பி எஸ்.டி. கார்டை அறிமுகப்படுத்துகிறது. இதன் விலை ரூ.51,990.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி