செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6-வது இடம்!…

அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6-வது இடம்!…

அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6-வது இடம்!… post thumbnail image
சிங்கப்பூர்:-2014ம் ஆண்டிற்கான வெல்த்-எக்ஸ் மற்றும் யூ.பி.எஸ். பில்லியனர் சென்சஸ் வெளியானது. அதில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் இந்தியாவுக்கு இந்த முறையும் பட்டியலில் 6-வது இடம் வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு 103 கோடீஸ்வர பணக்காரர்களை கொண்டிருந்த இந்தியாவுக்கு இந்த முறை 100 பேர் மட்டுமே உள்ளனர். எனினும், சொத்து மதிப்பின் மொத்த கூட்டுத்தொகை அடிப்படையில் இந்தியா 175 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொண்ட 100 கோடீஸ்வரர்களை கொண்டுள்ளது. உலக அளவில் 2,325 கோடீஸ்வரர்கள் இருக்கின்றனர். எனினும், சுவிட்சர்லாந்து, ஹாங்காங், பிரான்ஸ் போன்ற மற்ற நாடுகளை விட அதிக கோடீஸ்வரர்களை இந்தியா கொண்டுள்ளது. குறிப்பாக, நிதி தலைநகரான மும்பையில் 28 கோடீஸ்வரர்கள் உள்ளனர். உலக அளவில் 20 பில்லியனர் சிட்டிகளில் மும்பை இடம்பெற்றுள்ளது.

40 கோடீஸ்வர நாடுகளில் அமெரிக்கா 571 கோடீஸ்வரர்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சீனா (190) இரண்டாவது இடத்திலும், பிரிட்டன் (130) 3-வது இடத்திலும் உள்ளது. எவ்வாறாயினும், உலக கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதாக யூபிஎஸ் சென்சசில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2014-ல் மட்டும் 155 புதிய கோடீஸ்வரர்கள் உருவாகியிருக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி