அய்யோ பாவம் தங்கர்பச்சான்!…பீல் பண்ணிய இயக்குனர் பிரபுதேவா!…

விளம்பரங்கள்

சென்னை:-பிரபுதேவா தெலுங்கில் இரண்டு படங்களை இயக்கி விட்டு, மூன்றாவதாக தமிழுக்கு வந்து விஜய் நடிப்பில் போக்கிரி, அதற்கடுத்து வில்லு படங்களை இயக்கினார். இரண்டுமே ஹிட்டடித்தது. ஆனால் அதன் தொட்ச்சியாக அவர் இயக்கிய எங்கேயும் காதல், வெடி படங்கள் தோல்வியடைந்தன. அதனால், அதன்பிறகு பாலிவுட்டுக்கு சென்று வான்டட், ரவுடி ரத்தோர், ராமைய்யா வாஸ்தவைய்யா, ஆர்.ராஜ்குமார் ஆகிய படங்களை இயக்கியவர் இப்போது ஆக்சன் ஜாக்சன் என்ற படத்தை இயக்கிக்கொண்டிருப்பவர், அப்படத்தை இந்தியா முழுக்க வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், நீங்கள் இயக்கும் அனைத்து படங்களுமே கமர்சியலாக உள்ளதே. தங்கர்பச்சான் போன்று கவித்துவமான கதைகளை படமாக்கும் எண்ணம் இல்லையா…என்று அவரைக் கேட்டால், தங்கர்பச்சான் நல்ல இயக்குனர். நல்ல படங்களை மட்டுமே இயக்க ஆசைப்படுவார். ஆனால், அய்யோ பாவம். அவர் இயக்கிய களவாடிய பொழுதுகள் படம் இன்னமும் ரிலீசாகவில்லை. அதில் நானும், பூமிகாவும்தான் நடித்திருந்தோம். அதை வைத்து பார்க்கும்போது, சினிமாவில் நல்ல படம் என்பதை விட கமர்சியல் படம்தான் முக்கியம் என்று கருதுகிறேன். அதனால் எப்போதும் என் ரூட் கமர்சியலாக மட்டுமே இருக்கும் என்கிறார் பிரபுதேவா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: