‘கத்தி’ படத்தில் அனிருத் இசையில் கே.ஜே.யேசுதாஸ்!…

விளம்பரங்கள்

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ்விஜய் மீண்டும் இணைந்து பணியாற்றி வரும் ‘கத்தி‘ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் இசை வெளியீடு 18ம் தேதி நடை பெற உள்ளது. இன்றைய இளைஞர்களால் அதிகம் ரசிக்கப்படும் இசையமைப்பாளராக அனிருத் இருந்தாலும் அவரும் பழம் பெரும் கலைஞர்களுக்கு மரியாதை கொடுக்கத் தவறுவதில்லை.

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் பழம் பெரும் பாடகியான எஸ்.ஜானகியை பாட வைத்தார். தற்போது கே.ஜே.யேசுதாசைப் பாட வைத்திருக்கிறார்.தற்போதைய தலைமுறையைப் பொறுத்தவரையில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமும் அன்றைய காலகட்டத் திரையிசைப் பாடல்கள் அடிக்கடி பார்க்கப்படும் வாய்ப்புகள் கிடைப்பதால் அவர்கள் அந்தத் தரமான இசையை இன்றும் கேட்டு வருகிறார்கள்.

பழமையில் புதுமை, புதுமையில் பழமை என்பதெல்லாம் இன்றைய காலக்கட்டத்தில் நன்றாகவே ‘வொர்க் அவுட்’ ஆகி வருகின்றன. அந்த விதத்தில் ‘கத்தி’ இசையில் யேசுதாஸ் பாடியிருக்கும் பாடலும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: