செய்திகள்,பரபரப்பு செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் உலகிலேயே குழந்தைகள் இறப்பு இந்தியாவில் அதிகம் – ஐ.நா. தகவல்!…

உலகிலேயே குழந்தைகள் இறப்பு இந்தியாவில் அதிகம் – ஐ.நா. தகவல்!…

உலகிலேயே குழந்தைகள் இறப்பு இந்தியாவில் அதிகம் – ஐ.நா. தகவல்!… post thumbnail image
நியூயார்க்:-உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில், 1990க்குப் பிறகு குழந்தைகள் இறப்பு வீதம் பாதிக்குமேல் குறைந்துள்ளது. ஆனால், 2013ல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 1990ல் 3.33 மில்லியனாக இருந்த குழந்தைகள் இறப்பு, 2013ம் ஆண்டு 1.34 மில்லியனாக குறைந்துள்ளது. உலக அளவில் 12.7 மில்லியனில் இருந்து 6.3 மில்லியனாக குறைந்திருக்கிறது. 1990-ம் ஆண்டில் பிறந்த 1000 குழந்தைகளில் 88 குழந்தைகள் மரணமடைந்தன. இந்த விகிதம் 2013ம் ஆணடு 41 ஆக குறைந்துள்ளது.5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பானது பாதிக்கும் மேல் இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ குடியரசு மற்றும் சீனாவில் நடப்பதாகவும் ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி