செய்திகள்,திரையுலகம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் இந்தி படத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி காந்த் வழக்கு!…

இந்தி படத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி காந்த் வழக்கு!…

இந்தி படத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி காந்த் வழக்கு!… post thumbnail image
சென்னை:-ஹிந்தியில் ‘மெயின் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் தனது பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் ரஜினி காந்த் தாக்கல் செய்துள்ள மனுவில் ‘மெயின் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற படத்தில், எனது அனுமதியின்றி, தனது பெயரை பயன்படுத்தியுள்ளனர். மேலும் எனது பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளனர். எனவே இப்படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி படத்தை வரும் 25ம் தேதி வரை வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி