செய்திகள்,திரையுலகம் அஜீத்தின் முடிவிற்காக காத்திருக்கும் இயக்குனர் லிங்குசாமி!…

அஜீத்தின் முடிவிற்காக காத்திருக்கும் இயக்குனர் லிங்குசாமி!…

அஜீத்தின் முடிவிற்காக காத்திருக்கும் இயக்குனர் லிங்குசாமி!… post thumbnail image
சென்னை:-அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இப்படத்திற்கு பிறகு அஜீத் சிறுத்தை சிவாவுடன் கைகோர்க்க இருப்பது நமக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயம்.இப்படத்தின் கதையை கேட்ட அஜீத் படத்திற்கு தயாரிப்பாளரை நீங்களே முடிவு பண்ணுங்க என்று கூறியிருக்கிறார்.

இந்த தகவல் எப்படியோ லிங்குசாமி காதில் விழுந்திருக்கிறது. லிங்குசாமி, சிறுத்தை சிவாவிடம் இப்படத்தை நானே தயாரிக்கிறேன்.அதோடு, அஜீத் இப்போது வாங்கும் சம்பளத்தை விடவும் கூடுதலாக கொடுத்துவிடுகிறேன் என்று லிங்குசாமி கூறியுள்ளாராம். மேலும் அடுத்த கட்ட பேச்சு வார்த்தையை துவங்குங்கள் என்று சிறுத்தை சிவாவிடம் கூறிவிட்டாராம் லிங்குசாமி.இப்போது இதற்கு அஜீத் க்ரீன் சிக்னல் காட்டுவாரா என்பது லிங்குசாமியின் பெரிய குழப்பம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி