செய்திகள்,திரையுலகம் ரஜினி, அஜித், விஜய்யை பின்னுக்குத் தள்ளிய நடிகர் விக்ரம்!…

ரஜினி, அஜித், விஜய்யை பின்னுக்குத் தள்ளிய நடிகர் விக்ரம்!…

ரஜினி, அஜித், விஜய்யை பின்னுக்குத் தள்ளிய நடிகர் விக்ரம்!… post thumbnail image
சென்னை:-ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கி, விக்ரம் நடிக்கும் ‘ஐ’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டீஸர் வெளியீடு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. ஐ படத்தின் டீஸர் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. வெளியிட்ட 12 மணி நேரத்திலேயே இதன் டீஸரை 10 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் பல மடங்கு உயர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக அஜித்தின் ‘பில்லா 2’ பட டீஸரை ஒரே நாளில் 10 லட்சம் பார்வையாளர்கள் பார்த்திருந்தினர். அதைத் தொடர்ந்து விஜய் நடித்த ‘தலைவா’ படத்தின் டீஸரை அதற்கும் குறைவான நேரத்திற்குள் 10 லட்சம் ரசிகர்கள் கண்டுகளித்தனர்.அதன் பிறகு ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்தையும் ஒரே நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு மகிழ்ந்தனர்.

தற்போது இந்தப் படங்களையெல்லாம் ஐ பின்னுக்கு தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது. கோலிவுட்டை பொறுத்தவரை ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ படத்தின் டீஸரை மட்டுமே 50 லட்சத்திற்கும் அதிகமானோர் ‘யு டியூப்’பில் பார்த்திருப்பதே இதுவரை சாதனையாக உள்ளது. தொடர்ந்து இதே வேகத்தில் சென்றால் இந்த சாதனையை ‘ஐ’ படம் விரைவில் முறியடிக்கும் என்று கூறுகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி