செய்திகள்,திரையுலகம் துடிக்கும் துப்பாக்கி (2014) திரை விமர்சனம்…

துடிக்கும் துப்பாக்கி (2014) திரை விமர்சனம்…

துடிக்கும் துப்பாக்கி (2014) திரை விமர்சனம்… post thumbnail image
மேற்படிப்பு படிப்பதற்காக சீனாவுக்கு வருகிறாள் லூசி. அவளிடம் சூட்கேஸ் ஒன்றை கொடுத்து அதை சீனாவில் இருக்கும் ஜேன்ங் என்ற மிகப்பெரிய தாதாவிடம் ஒப்படைக்கச் சொல்கிறான் அவளுடைய நண்பன். லூசி அந்த வேலையை செய்ய மறுக்கிறாள்.அதனால் அவளது கையில் சூட்கேசுடன் ஒரு கைவிலங்கை மாட்டி, அந்த கைவிலங்கின் சாவி ஜேன்ங்கிடம் இருக்கிறது. அவனிடம் சூட்கேசை ஒப்படைத்து கைவிலங்கை நீக்கிக் கொள் ஒன்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறான். லூசி வேறு வழியில்லாமல் ஜேன்ங்கிடம் சென்று சூட்கேஸை ஒப்படைத்துவிட்டு தனது கையை விடுவித்துக் கொள்கிறாள்.

அந்த சூட்கேசுக்குள் மூளையின் உணர்ச்சிகளை தூண்டிவிடும் ரசாயன பவுடர் இருக்கிறது. அதை உலகில் உள்ள பல நாடுகளுக்கு அனுப்ப திட்டம் போட்டுள்ள ஜேன்ங், லூசி மற்றும் நான்கு பேரின் உடம்புக்குள் அந்த பவுடரை பாக்கெட் போட்டு தைத்து விடுகிறான். லூசி அந்த வேலையை செய்ய அடம்பிடிக்கிறாள்.ஜேன்ங்கின் அடியாட்கள் அவளை அடித்து துன்புறுத்துகின்றனர். அப்போது லூசியின் வயிற்றுக்குள் இருந்த ரசாயன பவுடர் பாக்கெட் உடைந்து அவளுடைய ரத்தத்தில் கலந்துவிடுகிறது. இதனால் லூசிக்கு மிகப்பெரிய சக்தி கிடைத்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.அவளுடைய மூளை சாதாரண மனிதர்களைவிட 10 சதவீதம் அதிகமாக வேலை செய்ய ஆரம்பிக்கிறது. தனக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை உணர்ந்துகொண்ட லூசி அங்கிருந்து தப்பித்து புரொபசர் நார்மனிடம் சென்று தன்னுடைய பிரச்சினைக்கு தீர்வு காண செல்கிறாள். அதே நேரத்தில் தன்னிடமிருந்து தப்பித்துச் சென்ற லூசியை தனது ஆட்களுடன் தேடிச் செல்கிறான் ஜேன்ங்.நேரம் ஆக ஆக லூசியின் மூளை வேலை செய்யும் திறன் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதேபோல் அவளுக்கு புதுவிதமான சக்திகளும் வருகின்றது. இறுதியில் என்ன நடந்தது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையாக சொல்லியிருக்கிறார்கள்.

லூசி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாகச நாயகி ஸ்கார்லெட் ஜோஹன்ஸனுக்கு படத்தில் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம். லூசியாக அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். தாதாவிடம் மாட்டிக்கொள்ளும் அப்பாவி பெண்ணாக அவர் படும் அவஸ்தைகள் ரசிக்க வைக்கிறது. லூசியின் மூளை பலமடங்கு வேலை செய்ய தொடங்கியதும் அவர் எதிரிகளை பந்தாடுவது தியேட்டரில் விசில் பறக்க வைக்கிறது.நம்ப முடியாத விஷயங்களை நம்ப வைக்கும் அளவுக்கு ஒளிப்பதிவும் கிராபிக்ஸ் வேலைகளும் பிரம்மாண்டமாக இருக்கின்றன. குறிப்பாக, லூசிக்கு மூளை செயல்படும் திறன் அதிகரித்த பிறகு ஒரு மரத்தை பார்க்கிறாள். அந்த மரத்திற்குள் இருக்கிற ஒவ்வொரு செல்லையும் அவளால் பார்க்க முடிவதுபோல் காட்சி அமைத்திருப்பது சிறப்பு.இதுபோல் இதுவரை எந்த படத்திலும் பார்த்திராத பல காட்சிகளை எடுத்திருப்பது இயக்குனர் லக் பெஸ்ஸன் தனி திறமைதான். சயின்ஸ் ஃபிக்ஷன் கதையை அழுத்தமான திரில்லராக படமாக்கியிருக்கிறார்.படம் பிரமிக்க வைக்கும் அளவுக்கு இருந்தாலும் ஒருசில இடங்களில் லாஜிக்கையும் மீறியிருக்கிறார்கள். அதேபோல் சொல்ல வந்த விஷயத்தை முழுதாக சொல்லி முடிக்காமல் பாதியிலேயே முடித்தது போன்ற உணர்வு நமக்குள் ஏற்படுகிறது.

மொத்தத்தில் ‘துடிக்கும் துப்பாக்கி’ ஆக்சன் அதிரடி…………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி