செய்திகள்,திரையுலகம் சைத்தான் இயக்குனருடன் இணைகிறார் அமிதாப் பச்சன்!…

சைத்தான் இயக்குனருடன் இணைகிறார் அமிதாப் பச்சன்!…

சைத்தான் இயக்குனருடன் இணைகிறார் அமிதாப் பச்சன்!… post thumbnail image
மும்பை:-மலையாள இயக்குனர் பிரியதர்ஷனிடம் உதவியாளராக இருந்து இந்தியில் இயக்கிய சைத்தான் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் பிஜோய் நம்பியார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் டேவிட் படத்தை இயக்கினார். தமிழ் பீட்சா படத்தை இந்தியில் தயாரித்தார். அடுத்து பிஜோய் நம்பியார் இயக்கும் படத்தில் அமிதாப்பச்சனும், ஃப்ரான் அக்தரும் நடிக்கிறார்கள்.

இது ஒரு சதுரங்க விளையாட்டு வீரனின் கதை. சதுரங்க விளையாட்டில் சாதனை படைத்த அமிதாப்பச்சனுக்கும், இளம் சாதனையாளர் அக்தருக்கும் இடையிலான மோதல், உரசல்கள்தான் கதை. தற்போது இந்த படத்திற்கான ஒத்திகை நடந்து வருகிறது. விது வினோத் சோப்ரா தயாரிக்கிறார்.

பிஜோய் நம்பியாரின் கதை அற்புதமாக இருக்கிறது. என் மனசுக்கு மிகவும் பிடித்திருப்பதால் படத்தின் முன் பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். முழு ஸ்கிரிப்டுடன் முழு டெக்னீஷியன்களும் ஷூட்டிங்கிற்கு முன்பே பணியாற்றுவது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது என்று அமிதாப் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி