செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு காஷ்மீரில் பதினோரு நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்த கிரிக்கெட் வீரர்!…

காஷ்மீரில் பதினோரு நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்த கிரிக்கெட் வீரர்!…

காஷ்மீரில் பதினோரு நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்த கிரிக்கெட் வீரர்!… post thumbnail image
புதுடெல்லி:-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான பர்வேஸ் ரசூல் அம்மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பதினோரு நாட்கள் அவதிப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.அம்மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பேஹரா பகுதியில் உள்ள அவரது வீட்டை வெள்ளம் சூழ்ந்த போது அவர் செய்த முதல் வேலை, தன்னுடைய கிரிக்கெட் கிட்டை முதல் மாடிக்கு தூக்கிச்சென்றது தான்.

அதன் பின் பதினோரு நாட்களுக்கு தான் அவதிப்பட்டது குறித்து அவரே கூறியதாவது; சமூகத்திலிருந்து என்னை முற்றிலும் விலக்கியதுடன் தொலைபேசி மற்றும் செல்போன்களும் வேலை செய்யவில்லை. இண்டர்நெட் இணைப்பும் சிடைக்கவில்லை. நானும் எனது பெற்றோரும் உதவிக்கு யாருமின்றி தவித்து வந்தோம்.தரைதளம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்ததால் நாங்கள் முதல் தளத்திற்கு வந்துவிட்டோம். தற்போது நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளோம் என்று எனது நண்பர்கள் மற்றும் ஏனையோருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ரசூல் கூறினார்.

அம்மாநில ரஞ்சி அணியின் தலைவராக உள்ள ரசூல், இந்த வருடம் தான் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றார். தற்போது தனது வீட்டிலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் செல்போன் இணைப்பு வேலை செய்வதாக ரசூல் கூறியுள்ளார். ஆனால் தன்னையும், தனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரையும் காணவில்லை என்ற போலியான செய்தி தனக்கு கிடைத்ததால் தான் வெளியுலகை தொடர்பு கொண்டதாக ரசூல் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி