அப்பாவுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த பிரபல நடிகை!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது ‘நண்பேன்டா’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்தப்படியாக தான் நடிக்கும் புதிய படத்தில் தனக்கு ஜோடியாக இந்தி சோனம் கபூரை நடிக்க வைக்க எண்ணி அவரிடம் பேசியுள்ளார். சோனம் கபூருக்கு கதையும் பிடித்து போய்விட்டது, ஆனால் சம்பள விஷயத்தில் சோனம் ஒத்து வராததால் நடிக்க மறுத்துவிட்டார்.

சோனம் இந்தபடத்திற்கு சுமார் ரூ.4.5 கோடி சம்பளம் கேட்டுள்ளார், அவ்வளவு பெரிய தொகை கொடுக்க உதயநிதி தயாராக இல்லை, இதனால் தான் ஏற்கனவே ஹீரோவாக அறிமுகமான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ஹன்சிகாவை ஓ.கே. செய்துவிட்டார்.

உதயநிதி நடிக்கும் படத்தில், ஹன்சிகாவின் அப்பாவாக அனில் கபூர் நடிக்கிறார். ஒருவேளை சோனம் கபூர் ஓ.கே. சொல்லியிருந்தால் தான், தன் அப்பாவுடன் நடிக்க வேண்டும் என்று எண்ணியிருந்த ஆசை நிறைவேறியிருக்கும். இதனால் சோனம், தற்போது வருத்தத்தில் இருக்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: