செய்திகள்,திரையுலகம் வித்யா பாலன் ஸ்டைலை பின்பற்றுகிறார் நடிகை லட்சுமி மேனன்!…

வித்யா பாலன் ஸ்டைலை பின்பற்றுகிறார் நடிகை லட்சுமி மேனன்!…

வித்யா பாலன் ஸ்டைலை பின்பற்றுகிறார் நடிகை லட்சுமி மேனன்!… post thumbnail image
சென்னை:-பாலிவுட் நடிகை வித்யா பாலன் எந்த விழாவில் கலந்து கொண்டாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் டிசைனர் சேலைகளை மட்டுமே உடுத்தும் வலம் கொண்டவர். இவரை பின்பற்றி, சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட லட்சுமி மேனன், அவரைப் போன்ற தோற்றத்தில் புடவையில், பாரம்பரிய நகைகளை அணிந்து கலந்து கொண்டுள்ளார்.

இந்த விழாவில் தமன்னா, அனிருத், தேவி ஸ்ரீ பிரசாத், ஸ்ரேயா சரண், ரெசினா, நிவின் பவுலி உள்ளிட்ட ஏராளமான தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியவர் லட்சுமி மேனன் தானாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி