செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நிறுத்த விஞ்ஞானிகள் மும்முரம்!…

மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நிறுத்த விஞ்ஞானிகள் மும்முரம்!…

மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நிறுத்த விஞ்ஞானிகள் மும்முரம்!… post thumbnail image
பெங்களூர்:-450 கோடி மதிப்பில் உருவான ‘மங்கள்யான்’ விண்கலம், செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி, ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட இந்த மங்கள்யான் விண்கலம், தனது பயணத்தில் இதுவரை 95 சதவீதத்தை முடித்துள்ளது. இந்த விண்கலத்தில் தற்போது உறங்கும் நிலையில் உள்ள எஞ்ஜினை வரும் செப்டம்பர் 21ந் தேதி நான்கு வினாடி நேரத்திற்கு இயங்கவைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த முயற்சியை தொடர்ந்து வரும் செப்டம்பர் 24ம் தேதி 24 நிமிட நேரத்திற்கு எரியூட்டம் செய்து விண்கலத்தின் வேகத்தை குறைத்த பின் செவ்வாய்க் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் அதை வெற்றிகரமாக நிலை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சோதனையில் இந்திய விஞ்ஞானிகள் வெற்றி பெற்றால் முதல் முயற்சியிலேயே விண்கலத்தை வெற்றிகரமாக நிலை நிறுத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெரும்.

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய விண்வெளி மையம் ஆகியவை தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பின் தான் இச்சோதனை முயற்சியில் வெற்றி கண்டது. விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைவதற்கு முன் 515 கி.மீ தொலைவிலேயே அதில் போக்கு திருத்தம் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி