செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் நடிகர் விஜய்யின் கத்தி பட சர்ச்சை: தயாரிப்பாளர் விளக்கம்!…

நடிகர் விஜய்யின் கத்தி பட சர்ச்சை: தயாரிப்பாளர் விளக்கம்!…

நடிகர் விஜய்யின் கத்தி பட சர்ச்சை: தயாரிப்பாளர் விளக்கம்!… post thumbnail image
சென்னை:-விஜய், சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘கத்தி’ படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது.இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு லைக்கா நிறுவன அதிபர் நெருக்கமானவர் என்றும், எனவே படத்தை வெளியிடக்கூடாது என்றும் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. போராட்டங்களும் நடந்தது.

ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் தமிழ் அமைப்பு தலைவர்களை சந்தித்தனர். ராஜபக்சேவுடன் பட நிறுவனத்துக்கு எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்தனர். இதையடுத்து சீமான் உள்ளிட்ட பலர் ‘கத்தி’ படத்துக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டனர். இந்நிலையில் ‘கத்தி’ பட சர்ச்சை குறித்து ‘லைக்கா’ பட நிறுவன அதிபர் சுபாஷ்கான் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

கத்தி படத்தில் தமிழ் விரோத காட்சிகள் எதுவும் இல்லை. ராஜபக்சேவுக்கும், எனக்கும் தொடர்பு இருப்பதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை. எங்களுக்குள் எவ்வித தொழில் தொடர்பும் கிடையாது. நான் இலங்கையில் பிறந்து வளர்ந்தேன். பல வருடங்களுக்கு முன்பு இலங்கையை விட்டு வெளியேறினேன்.ஐரோப்பிய நாடுகளில் கடந்த 27 வருடமாக தொழில் செய்து வருகிறேன். என் உறவினர்கள் பலர் இலங்கை அதிபருக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டு உள்ளனர். எனவே ‘கத்தி’ பட தயாரிப்பாளரான எனக்கும் ராஜபக்சேக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி