செய்திகள்,விளையாட்டு டேவிஸ் கோப்பையில் யூகி பாம்ப்ரி தோல்வி: ஆசியா-ஓசியானா சுற்றுக்கு பின்தங்கியது இந்தியா!…

டேவிஸ் கோப்பையில் யூகி பாம்ப்ரி தோல்வி: ஆசியா-ஓசியானா சுற்றுக்கு பின்தங்கியது இந்தியா!…

டேவிஸ் கோப்பையில் யூகி பாம்ப்ரி தோல்வி: ஆசியா-ஓசியானா சுற்றுக்கு பின்தங்கியது இந்தியா!… post thumbnail image
பெங்களூர்:-டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் செர்பியா-இந்தியா இடையிலான உலக குரூப் பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் பெங்களூரில் நடந்தன. முதல் நாளில் நடந்த ஒற்றையர் ஆட்டங்களில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், யூகி பாம்ப்ரி தோல்வி அடைந்தனர்.அதன்பின்னர் 2-வது நாளில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்-ரோகன் போபண்ணா ஜோடி 5 செட் வரை போராடி வென்றார். இதனால், 1-2 என இந்தியா பின்தங்கி இருந்தது.

கடைசி நாளான நேற்று நடந்த முதலாவது மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 144-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், 61-ம் தரநிலையில் உள்ள லாஜோவிச்சை 1-6, 6-4, 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். இதனால், போட்டித் தொடர் 2-2 என்ற கணக்கில் சமன் ஆனது.இதையடுத்து உலக சுற்றுக்குள் நுழைவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதி மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் யூகி பாம்ப்ரி, செர்பியாவின் பிலிப் காஜினோவிச்சுடன் விளையாடினார். நள்ளிரவில் நடந்த ஆட்டத்தில் காஜினோவிச் 6-3, 4-4 என்று முன்னிலை வகித்த போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

பின்னர் இன்று தொடர்ந்து நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யூகி பாம்ப்ரி தொடர்ந்து தவறுகளை செய்ததால் செர்பிய வீரருக்கு சாதகமாக அமைந்துவிட்டது. இறுதியில் காஜினோவிச் 6-3, 6-4, 6-4 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார்.இதன்மூலம் 3-2 என்ற கணக்கில் இந்தியாவை வென்ற செர்பிய அணி, டேவிஸ் கோப்பை தொடரின் உலக சுற்றுக்கு முன்னேறியது. தோல்வியடைந்த இந்திய அணி ஆசியா-ஓசியானியா சுற்றுக்கு பின்தங்கியது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி