முத்தக் காட்சியில் நடித்துள்ள நடிகை ரெஜினா!…

விளம்பரங்கள்

சென்னை:-‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் நாயகி ரெஜினா சில தினங்களுக்கு முன் வெளியான ‘பவர்’ படத்தில் முன்னணி நடிகரான ரவி தேஜாவுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். படத்தில் ஹன்சிகாதான் முக்கியமான கதாநாயகி என்றாலும் பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் நாயகியாக ரெஜினா நடித்திருக்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் அவருடைய கதாபாத்திரத்தை ‘நச்’ என உருவாக்கியிருக்கிறாராம் இயக்குனர்.

ரவி தேஜா நடிக்கும் படங்களில் கிளாமரான ஹீரோயின்கள் வருவார்களே தவிர, முத்தக் காட்சிகளோ, ஆபாசமான காட்சிகளே இருக்கவே இருக்காது. அவருக்கு பெண் ரசிகைகளும், குடும்பத்துடன் படம் பார்க்கும் ரசிகர்களும் அதிகம். ஆனால், ‘பவர்’ படத்தின் இயக்குனரான கே.எஸ்.ரவீந்திரா கேட்டுக் கொண்டதற்கிணங்க ரவிதேஜா அந்த முத்தக் காட்சியில் நடிக்க சம்மதித்தாராம்.

படத்தில் உள்ள அந்தக் காட்சியைப் பற்றி இதுவரை வெளியில் சொல்லாமல் இருந்திருக்கிறார்கள். படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கத்தான் அதை சொல்லாமல் விட்டார்களாம். ஒரு பாடல் காட்சியில்தான் அந்த முத்தக் காட்சி வைக்கப்பட்டிருக்கிறதாம். எந்த உறுத்தலும் இல்லாமல் மென்மையான விதத்தில்தான் அந்தக் காட்சி எடுக்கப்பட்டதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: