நடிகர் விஜய் எனக்கு ரொம்ப பிடிக்கும் – அபிஷேக் பச்சன்!…

விளம்பரங்கள்

சென்னை:-பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன். இவர் இந்தியில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது இந்தியன் சூப்பர் லீக் கால் பந்து போட்டிக்காக சென்னை அணியை வாங்கியுள்ள அபிஷேக் பச்சன் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், தமிழ் படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.

இன்று அவர் அளித்த பேட்டியில், கோலிவுட்டில் தனக்கு பிடித்த நடிகர்களின் பெயர்களை பட்டியலிட்டார். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் என்னை மிகவும் கவர்ந்தவர்கள். மேலும் இளம் தலைமுறை நடிகர்களில் விஜய்யை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறிய அபிஷேக், சியான் விக்ரம் மீது நல்ல மரியாதை உள்ளது என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: