சாப்பாட்டைக் காதலிக்கும் பிரபல நடிகை!…

விளம்பரங்கள்

சென்னை:-‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை சுவாதி. தற்போது ‘அமளி துமளி, கார்த்திகேயா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.சில தினங்களுக்கு முன் தெலுங்கு செய்திச் சேனல் ஒன்று அவர் தமிழ் நடிகர் ஒருவர் மீது காதல் கொண்டிருப்பதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்தியை வெளியிட்டது. அந்தச் செய்திக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் சுவாதி.

திரும்பவும் என்னைப் பற்றிய திருமண வதந்திகள் பரவி வருகிறது. ஒரு தெலுங்குச் சேனலில் என்னுடைய திருமணச் செய்தியைப் பார்த்தேன். நான் அந்த தமிழ் நடிகருடன் எப்படி காதல் கொண்டேன், எங்களது பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதித்து விட்டார்கள் என்றெல்லாம் ஒரு கதையை சொல்லியிருக்கிறார்கள். ஆனால், நான் தனிமையில் காதலித்துக் கொண்டிருக்கிறேன், எதைத் தெரியுமா, என் ஃபிரிட்ஜையும், அதிலுள்ள உணவுப் பொருட்களையும் தான் காதலிக்கிறேன் என கிண்டலாகச் சொல்லியிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: