செய்திகள்,திரையுலகம் சாதனை புரிந்த ‘ஐ’ திரைப்படத்தின் தெலுங்கு உரிமை!…

சாதனை புரிந்த ‘ஐ’ திரைப்படத்தின் தெலுங்கு உரிமை!…

சாதனை புரிந்த ‘ஐ’ திரைப்படத்தின் தெலுங்கு உரிமை!… post thumbnail image
சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ திரைப்படத்தின் டப்பிங் உரிமை சுமார் 27 கோடி ரூபாய்க்கு விற்கபட்டது. மீண்டும் ஷங்கர் இயக்கத்திலேயே உருவாகியுள்ள படமான ‘ஐ’ படம் அந்த சாதனையை முறியடித்து 30 கோடி ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனால், ஒரு தமிழ்ப் படம் டப்பிங் செய்யப்பட்டு தெலுங்கில் வெளியிடப்பட்டால், அந்தப் படம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அதிக பட்சம் 20 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகும் என்று சொல்கிறார்கள்.

அப்படியிருக்க ‘ஐ’ படம் 30 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்தத் தொகையை வசூலிப்பது கடினம் என்றும் சொல்கிறார்கள். ஆனால், ஷங்கர் படம் என்பதால் எதுவும் நடக்க வாய்ப்புள்ளது. அப்படி அந்தத் தொகையை ‘ஐ’ படம் வசூலித்துக் கொடுத்து விட்டால் அது மிகப் பெரிய வசூல் சாதனையாக அமைந்துவிடும் என்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி