செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ பட விழாவுக்கு ரஜினி, கமலை நேரில் சென்று அழைத்த இயக்குனர் ஷங்கர்!…

‘ஐ’ பட விழாவுக்கு ரஜினி, கமலை நேரில் சென்று அழைத்த இயக்குனர் ஷங்கர்!…

‘ஐ’ பட விழாவுக்கு ரஜினி, கமலை நேரில் சென்று அழைத்த இயக்குனர் ஷங்கர்!… post thumbnail image
சென்னை:-ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள ‘ஐ’ படத்தின் ஆடியோ விழாவை வருகிற 15ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடத்துகிறார்கள். அதனால் விழாவில் கலந்து கொள்ள இந்திய அளவில் உள்ள முன்னணி சினிமா கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும் வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, ரஜினி மற்றும் கே.எஸ்.ரவிக்குமாரை கர்நாடகத்தில் நடைபெறும் லிங்கா படப்பிடிப்புக்கு நேரில் சென்று அழைப்பிதழ் வைத்து அழைத்திருக்கிறார், ஷங்கர். அதனால் அன்றைய தினம் லிங்கா படப்பிடிப்பையே ரத்து செய்துவிட்டு விழாவில் கலந்து கொள்வதாக கூறியுள்ளாராம் ரஜினி. அதேபோல் கமலையும் பாபநாசம் படப்பிடிப்புக்கு சென்று அழைத்துள்ளாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி