செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ படத்தால் நின்ற ரஜினியின் லிங்கா!…

‘ஐ’ படத்தால் நின்ற ரஜினியின் லிங்கா!…

‘ஐ’ படத்தால் நின்ற ரஜினியின் லிங்கா!… post thumbnail image
சென்னை:-சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. பாடல்கள் மற்றும் ஒரு சில காட்சிகள் மட்டுமே மீதம் இருக்கிறது.இந்நிலையில் இன்னும் 2 வாரத்திற்கு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏன் என்று விசாரித்தால், ஷங்கர் தான் இயக்கிய ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினி வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

ரஜினிக்கும், ஷங்கரின் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை உள்ளதால் சம்மதம் தெரிவிக்க, லிங்கா படப்பிடிப்பிற்கு சில நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி