நடிகை காஜல் அகர்வாலுக்கு நோட்டீஸ்!…

விளம்பரங்கள்

சென்னை:-நண்பேண்டா படத்தில் தன்னுடன் சேர்ந்து நடிக்க காஜல் அகர்வாலிடம் பேசி வைத்திருந்தாராம் உதயநிதி. காஜலும் ஒப்புக்கொண்டிருந்திருக்கிறார். இதற்காக அவருக்கு ரூ.1 கோடியே 40 லட்சம் சம்பளம் தருவதாக பேசப்பட்டது.இதில் ரூ.40 லட்சம் அட்வான்ஸ் ஆக கொடுக்கப்பட்டது.

ஆனால் காஜல் அகர்வால் நண்பேன்டா படத்தில் நடிக்கவில்லை. காரணம், இது கதிர்வேலன் காதல் படத்தில் உதயநிதி-நயன்தாரா இருவரின் கெமிஸ்ட்ரி பேசப்படவே நண்பேன்டா படத்தில் மீண்டும் நயன்தாராவையே ஒப்பந்தம் செய்துவிட்டார் உதயநிதி. இப்போது நண்பேன்டா படம் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், நண்பேன்டா படத்துக்காக தான் கொடுத்த 40 லட்சம் பணத்தை காஜல் அகர்வாலிடம் உதயநிதி திருப்பி கேட்டிருக்கிறார்.

ஆனால் காஜலோ பணத்தை திருப்பித் தர மறுத்து விட்டாராம். ‘நண்பேன்டா’ படத்துக்காக தேதிகளை ஒதுக்கி வைத்திருந்ததால் ஜுனியர் என்.டி.ஆருடன் தெலுங்கு படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்றும் அந்த நஷ்டத்தை ஈடுகட்ட 40 லட்சம் வேண்டும் என்றும் கூறிவிட்டாராம். பொறுத்துப் பார்த்த உதயநிதி, காஜல் அகர்வால் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.காஜல் அகர்வாலிடம் இதுகுறித்து கேட்டபோது, உதயநிதி புகார் கடிதம் இதுவரை எனக்கு வரவில்லை. அக்கடிதம் கிடைத்ததும் உதயநிதி மீது நடிகர் சங்கத்தில் புகார் செய்வேன் என்றார். இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கம், நடிகை காஜல் அகர்வாலிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: