செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இயக்குனர் முருகதாஸ்!…

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இயக்குனர் முருகதாஸ்!…

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இயக்குனர் முருகதாஸ்!… post thumbnail image
சென்னை:-‘தீனா’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தில் அஜீத் கதாநாயகனாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து ‘ரமணா’, ‘கஜினி’, ‘7ம் அறிவு’, ‘துப்பாக்கி’ உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்து வசூலில் சாதனை படைத்துள்ளது. தற்போது இவர் விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கி வருகிறார். இதன் இசை செப்டம்பர் 18ம் தேதி வெளியாக உள்ளது.இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முருகதாஸ் திங்களன்று அனுமதிக்கப்பட்டார்.

சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மருத்துவமனையில் திரையுலக பிரபலங்கள் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.சிகிச்சைக்குப்பிறகு முருகதாஸ் இன்று வீடு திரும்பியுள்ளார். மேலும் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் படக்குழுவினர், நண்பர்கள், விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி