செய்திகள் அமெரிக்காவில் எய்ட்ஸ் நோயை பரப்பும் வாலிபர்!… தடுத்து நிறுத்த கோர்ட்டு உத்தரவு…

அமெரிக்காவில் எய்ட்ஸ் நோயை பரப்பும் வாலிபர்!… தடுத்து நிறுத்த கோர்ட்டு உத்தரவு…

அமெரிக்காவில் எய்ட்ஸ் நோயை பரப்பும் வாலிபர்!… தடுத்து நிறுத்த கோர்ட்டு உத்தரவு… post thumbnail image
வாஷிங்டன்:-அமெரிக்காவில் எய்ட்ஸ் நோய் அதிக அளவில் பரவி வருகிறது. இங்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் இந்த நோய் தாக்குதல் குறித்து தெரியாமல் வாழ்கின்றனர்.இந்த தகவலை நோய்தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எய்ட்ஸ் நோய் பரப்பும் ஒரு வாலிபர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த நபரின் பெயர் ‘ஏ.ஓ.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை கடந்த 2008ம் ஆண்டு எய்ட்ஸ் நோய் தாக்கியது. இவர் பல பெண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் ‘செக்ஸ்’ உறவு வைத்து கொண்டார்.
அதனால் இவர் மூலம் கடந்த 2010 முதல் 2014ம் ஆண்டுவரை 8 பேருக்கு எய்ட்ஸ் நோய் பரவியுள்ளது.எனவே, அவர் எய்ட்ஸ் நோய் பரப்புவதை தடுக்கும்படி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவர் பாதுகாப்புடன் கூடிய செக்ஸ் உறவு வைத்து கொள்ளவும், அதன் மூலம் எய்ட்ஸ் நோயை பரவாமல் தடுக்கவும் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையத்துக்கு உத்தரவிட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி