நண்பர்களுக்காக படம் எடுக்கும் நடிகர் விஷால்!…

விளம்பரங்கள்

சென்னை:-நட்சத்திர கிரிக்கெட் விளையாட்டு மூலம் தமிழ் சினிமாவின் இளவட்ட நடிகர்களுக்கிடையே நல்லதொரு நட்பு வட்டம் உருவாகியிருக்கிறது. அதிலும், அனைவரிடமும் இயல்பாக பழகும் நடிகர் விஷாலுக்கு பல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

அவர்களில், ஆர்யா, விஷ்ணு, விக்ராந்த் உள்ளிட்ட சிலர் விஷாலுக்கு உயிர் நண்பர்களாகி விட்டனர். அதில் விக்ராந்துக்கு தான் நடித்த பாண்டிய நாடு படத்தில் ஒரு கேரக்டர் கொடுத்தார். அதோடு, விஷ்ணுவுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தவர், தற்போது அவர் சுசீந்திரன் இயக்கத்தில் நடித்து வரும் ஜீவா படத்தை தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் ரிலீஸ் செய்ய முன்வந்திருக்கிறார்.

இந்நிலையில், தனது நிறுவனத்தின் மூலம் இதுவரை பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் படங்களைத் தொடர்ந்து இப்போது பூஜை படத்தையும் தயாரித்து நடித்து வரும் விஷால், அடுத்தபடியாக விஷ்ணு-விக்ராந்தை இணைத்து ஒரு படம் தயாரிக்கப் போகிறாராம். தேவைப்பட்டால் அந்த படத்தில் தானும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க திட்டமிட்டுள்ள விஷால், தற்போது கதை கேட்கும் படலத்தையும் தொடங்கியிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: