செய்திகள்,திரையுலகம் விஷ்ணு நடித்துள்ள ‘ஜீவா’ படத்தை வெளியிடும் நடிகர் விஷால்!…

விஷ்ணு நடித்துள்ள ‘ஜீவா’ படத்தை வெளியிடும் நடிகர் விஷால்!…

விஷ்ணு நடித்துள்ள ‘ஜீவா’ படத்தை வெளியிடும் நடிகர் விஷால்!… post thumbnail image
சென்னை:-பழகியவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து வரும் நடிகர் விஷால், பாண்டியநாடு படத்தில் தன்னுடன் நடித்த விக்ராந்துக்கு தனது விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பினையும் கொடுத்துள்ளார். அதையடுத்து, இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் இன்னொரு நண்பர் விஷ்ணு நடித்துள்ள ஜீவா படத்தை தானே வெளியிடவும் முன்வந்துள்ளாராம்

சில சினிமா மேடைகளில் விஷாலை விஷ்ணு கலாய்ப்பது, விஷ்ணுவை விஷால் கலாய்ப்பது என சில சம்பவங்கள் நடந்தபோதும், தொழில் என்று வருகிறபோது சீரியசாக யோசிக்கும் விஷால், நண்பன் விஷ்ணுவுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த ஜீவா படத்தை தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிடுகிறாராம்.இம்மாதம் 26ம் தேதி படத்தை ரிலீஸ் பண்ண திட்டமிடப்பட்டுள்ளனராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி