செய்திகள்,திரையுலகம் பாலிவுட்டை காலி செய்கிறார் நடிகை அசின்!…

பாலிவுட்டை காலி செய்கிறார் நடிகை அசின்!…

பாலிவுட்டை காலி செய்கிறார் நடிகை அசின்!… post thumbnail image
சென்னை:-தமிழில் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் அறிமுகமானவர் நடிகை அசின். தமிழில் அவர் நடித்த கஜனி படம் இந்திக்கு சென்றபோது அப்படியே ஏ.ஆர்.முருகதாஸ் அசினையும் அழைத்து சென்றார். இந்தி கஜினி பெரிய வெற்றிபெறவே அங்குள்ள கான், கபூர் நடிகர்களை பிரண்டாக்கி கொண்டு நடிக்க ஆரம்பித்தார். லண்டன் ட்ரீம்ஸ், ரெடி, ஹவுஸ்புல் 2, போல் பச்சன், கில்லாடி 786 படங்களில் நடித்தார் எல்லாமே சுமார்தான். தற்போது ஆல் இஸ் வெல் படத்தில் மட்டும் நடித்து வருகிறார். வேறு வாய்ப்புகள் இல்லை.

இந்தியில் அவர் நினைத்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. பிரியங்கா சோப்ரா, சோனாக்ஷி சின்ஹா, ஆலியா பட், கேத்ரினா கைப் போன்ற அழகு தேவதைகளுக்கு முன்னால் அசினால் தாக்கு பிடிக்கமுடியவில்லை. பொறுமையாக வாய்ப்புகளுக்கு காத்திருந்தார். எதுவும் நடக்கிற மாதிரி தெரியவில்லை. அதனால் இனி தென்னிந்திய படங்களில் குறிப்பாக தமிழ் படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். விரைவில் தென்னிந்திய ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி சொல்வேன் என்று தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி