செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் எபோலா நோய்க்கு இதுவரை 1900 பேர் பலி: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!…

எபோலா நோய்க்கு இதுவரை 1900 பேர் பலி: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!…

எபோலா நோய்க்கு இதுவரை 1900 பேர் பலி: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!… post thumbnail image
ஜெனீவா:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் நோய் தாக்கி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதைத்தொடர்ந்து உலக சுகாதார நிறுவன தலைவர் மார்க்ரெட் ஷான் கூறியதாவது:–

ஆப்பிரிக்க நாடுகளை எபோலா நோய் தாக்கி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தாலும் தற்போது நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நோயை முற்றிலும் ஒழிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.எபோலா நோய்க்கு இதுவரை 1900 பேர் பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்து 500 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கினியா, சியாரா லியோன், லைபீரியா பகுதிகளில் இந்த நோய் தாக்கம் அதிகமாக உள்ளது.

நோய் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரதிநிதிகள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நோய் கட்டுப்பாட்டு நிபுணர்களை கொண்ட ஆலோசனை கூட்டம் விரைவில் ஜெனீவாவில் நடைபெற உள்ளது. இதில் முக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.எபோலா நோய் தாக்கம் நாங்கள் எதிர்பார்த்ததை விட மோசமாக இருந்தது. ஆனாலும் நிலைமை தற்போது திருப்தியாக இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி