செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஆசிய விளையாட்டில் இருந்து சோம்தேவ் விலகில்: டென்னிஸ் கூட்டமைப்பு அதிருப்தி!…

ஆசிய விளையாட்டில் இருந்து சோம்தேவ் விலகில்: டென்னிஸ் கூட்டமைப்பு அதிருப்தி!…

ஆசிய விளையாட்டில் இருந்து சோம்தேவ் விலகில்: டென்னிஸ் கூட்டமைப்பு அதிருப்தி!… post thumbnail image
புதுடெல்லி:-தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் வரும் 19ம் தேதி ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற உள்ளன. இதற்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியாவின் முதல்நிலை டென்னிஸ் வீரரான சோம்தேவ் தேவ்வர்மன் போட்டியில் இருந்து விலகினார். தனது சர்வதேச தரநிலையை மேம்படுத்தும் நோக்கில் அவர் விலகியிருக்கிறார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து விலகுவதாக சோம்தேவ் எடுத்த இந்த திடீர் முடிவு சரியல்ல என்று அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பாரத் ஓஜா கூறியதாவது:-சோம்தேவின் இந்த முடிவு சரியான முடிவல்ல; ஏமாற்றம் அளிக்கிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு செய்யும் முன், தன்னிடம் கேட்கவில்லை என்று கூறியுள்ளார். நாட்டின் முதல் நிலை வீரராக உருவெடுத்தது முதலே அவர் விளையாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அணிகளுக்கான போட்டியிலாவது அவர் விளையாட வேணடும் என கூறினோம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்தோம். ஆனால், அவர் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

நாங்கள் எதுவும் செய்ய முடியாது. முன்னணி வீரர்கள் விளையாட வேண்டும் என்பது அரசின் விருப்பம். நாங்கள் யாரையும் விளையாடும்படி வற்புறுத்த முடியாது, வேண்டுகோள் மட்டுமே வைக்க முடியும். அரசுக்கு நாங்கள் பதில் கூற வேண்டும் கூறினால்கூட அதற்கும் ஆட்சேபம் வரலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி