அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டதாக உக்ரைன் அதிபர் அறிவிப்பு!…

ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டதாக உக்ரைன் அதிபர் அறிவிப்பு!…

ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டதாக உக்ரைன் அதிபர் அறிவிப்பு!… post thumbnail image
கீவ்:-உக்ரைன் நாட்டை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க ரஷ்ய ஆதரவாளரான முன்னாள் அதிபர் விக்டர் யனுகோவிச் மறுத்ததால் அவரை எதிர்த்து மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் காவல்துறையின் அடக்குமுறையால் வன்முறை சம்பவங்களாக மாறியது.இதனையடுத்து, தலைநகர் கீவ்வில் உள்ள சுதந்திர சதுக்கத்தை கைப்பற்ற லட்சக்கணக்கான மக்கள் திரண்டு சென்றனர். அவர்களை தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டது.

அவர்களை நோக்கி காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கலைந்து செல்ல வைக்க முயற்சித்தனர். காவலர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர்.இதில் நகரில் உள்ள பல கட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகினர். போராட்டக்காரர்களுடன் சமாதானமாக போக விரும்புவதாக கூறிய அதிபர் விக்டர் யனுகோவிச் எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை அமைத்தார்.அந்த குழுவின் ஆலோசனையின்படி, பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த விக்டர் யனுகோவிச்சை அதிபர் பதவியில் இருந்து நீக்குவதாக பாராளுமன்றம் அறிவித்தது. அதிபர் வசிக்கும் மாளிகை உட்பட தலைநகர் கீவ் முழுவதும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாகவும், அதிபர் விக்டர் யனுகோவிச் கீவ் நகரை விட்டு வெளியேறிவிட்டதாகவும் போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.

கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி உக்ரைனில் நடந்து வந்த கூட்டணி அரசு கவிழ்ந்து விட்ட நிலையில், ரஷ்யாவுக்கும் முன்னாள் அதிபர் யனுகோவிச்சுக்கு ஆதராவாளர்களாக இருக்கும் சில எம்.பி.க்கள் சமீபத்தில் தனியாக பிரிந்து சென்ற கிழக்கு உக்ரைன் கிளர்ர்சியாளர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ அதரவு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.இதற்கிடையே, சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், எனக்கு தேவை என்று கருதினால் இரண்டே வாரத்தில் கீவ் நகரை கைப்பற்றி விடுவேன் என்று கூறியிருந்தார்.உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே கருத்தொற்றுமையை உருவாக்கும் நோக்கத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா அந்நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
இது தொடர்பாக, வரும் வெள்ளிக்கிழமை ‘நேட்டோ’ நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசவும் ஒபாமா திட்டமிட்டுள்ளார்.இந்நிலையில், இவ்விவகாரத்தில் எதிர்பாராத திருப்பமாக ரஷ்யாவுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டதாக உக்ரைன் அதிபர் பெட்ரோ போரொஷென்கோ இன்று அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை ரஷ்ய தரப்பு உறுதிப்படுத்தவில்லை. கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவாளர்களும் இது தொடர்பாக எந்த கருத்தையும் கூற மறுத்துவிட்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி