செய்திகள்,திரையுலகம் மகனை இயக்குனராக்கும் ‘சூப்பர் ஸ்டார்’!…

மகனை இயக்குனராக்கும் ‘சூப்பர் ஸ்டார்’!…

மகனை இயக்குனராக்கும் ‘சூப்பர் ஸ்டார்’!… post thumbnail image
சென்னை:-மலையாள சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ நடிகரான மோகன்லால் அவரது மகன் ப்ரணவை இன்னமும் சினிமாவில் அறிமுகம் செய்யவில்லை. ஏற்கனவே இதுபற்றி அங்குள்ள மீடியாக்கள், உங்கள் மகனை எப்போது ஹீரோவாக அறிமுகம் செய்யப்போகிறீர்கள்? என்று கேட்டபோது, அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்று கூறினார்.

இப்போது மகன் ப்ரணவை ஹீரோவாக அறிமுகம் செய்யாமல், உதவி இயக்குனராக பணியாற்ற வைத்திருக்கிறார் மோகன்லால். கமல் நடித்து வரும் த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தை இயக்கும் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம்தான் உதவியாளராக பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார் ப்ரணவ்.

ஹீரோவின மகன் ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படாமல், டைரக்டராக வேண்டும் என்ற தனது ஆசையை தந்தையிடம் ப்ரணவ் சொல்லியதை அடுத்து, இப்போது அவர் உதவி இயக்குனராகியிருக்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி