செய்திகள்,திரையுலகம் ‘சலீம்’ படத்தின் கதை கொரியன் திரைப்படத்திலிருந்து திருடப்பட்டதா!…

‘சலீம்’ படத்தின் கதை கொரியன் திரைப்படத்திலிருந்து திருடப்பட்டதா!…

‘சலீம்’ படத்தின் கதை கொரியன் திரைப்படத்திலிருந்து திருடப்பட்டதா!… post thumbnail image
சென்னை:-சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தில் சலீம் என்ற படத்தில் மனிதாபிமானமிக்க டாக்டர் வேடத்தில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி.தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றும் சலீமை, மருத்துவமனையின் நிர்வாகம் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, அவரை வேலை நீக்கமும் செய்கிறது.
அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணும் சலீமை புரிந்து கொள்ளாமல் டார்ச்சர் செய்கிறார், இன்னொரு பக்கம். சலீமை தொடர்ந்து அவமானப்படுத்தும் கதாநாயகி, ஒருகட்டத்தில் சலீமை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்று சொல்லி திருமணத்தையே நிறுத்திவிடுகிறார்.

இரண்டு பக்கமும் இடிபட்ட வெறுத்துப்போன சலீம் வெகுண்டெழுகிறார் என்பதாக சலீம் படத்தின் கதை உள்ளது.2007 ஆம் ஆண்டு வெளியான பிங் பேங்க் என்ற கொரிய திரைப்படத்தின் கதையும் இதுதான்.பார்க் ஜங் வூ என்ற கொரிய இயக்குநரின் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் ஹீரோவான பார்க் மேன் சூ அலுவலகத்தில் வேலை செய்யும் சாதாரண சிப்பந்தி.தான் உண்டு தன் வேலை உண்டு என்று சராசரியான வாழ்க்கை வாழ்கிற அவனுடன் வாழ அவனது மனைவிக்கு பிடிக்கவில்லை. எனவே, விவாகரத்து கேட்கிறாள்.இன்னொரு பக்கம், அவனது முதலாளி மிகப்பெரிய ஊழல் பெருச்சாளியாக இருக்கிறான்.இவர்களுக்கிடையில் சிக்கி மன உளைச்சலுக்குள்ளாகும் பார்க் மேன் சூ, ஒரு கட்டத்தில் கடுப்பாகிறான்.ஃபுல்லாக மது குடித்துவிட்டு, காரில் கண்மண் தெரியாமல் பறக்கிறான்.

போலீஸ் அவனை மடக்குகிறது. போலீஸ் ஸ்டேஷனில் அடைபட்டுள்ள ஒரு ரௌடியுடன் சேர்ந்து கொண்டு போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியையும், வாகனத்தையும் எடுத்துக்கொண்டு தப்பிக்கிறான் பார்க் மேன் சூ.பிங் பேங்க் படத்தின் இந்தக் கதையைத்தான் காப்பியடித்து சில காட்சிகளை கூடுதலாக சேர்த்து சலீம் படமாக எடுத்திருக்கிறார்கள்.பிங் பேங்க் படத்தின் கதையை காப்பியடித்து சலீம் படத்தை எடுத்திருப்பது படத்துறையில் பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி