செய்திகள்,விளையாட்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து டென்னிஸ் வீரர் சோம்தேவ் விலகல்!…

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து டென்னிஸ் வீரர் சோம்தேவ் விலகல்!…

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து டென்னிஸ் வீரர் சோம்தேவ் விலகல்!… post thumbnail image
புதுடெல்லி:-தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் வரும் 19ம் தேதி ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற உள்ளன. இதற்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆசிய போட்டிகளில் இருந்து இந்தியாவின் முதல்நிலை டென்னிஸ் வீரரான சோம்தேவ் தேவ்வர்மன் விலகியுள்ளார்.

29 வயதான சோம்தேவ, தனது சர்வதேச தரநிலையை மேம்படுத்தும் நோக்கில் இந்த போட்டியில் இருந்து விலகும் முடிவை மேற்கொண்டதாக கூறியுள்ளார்.ஆகஸ்ட் மாத நிலவரப்படி சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் சோம்தேவ 147-வது இடத்தில் இருந்தார். அதிகபட்சமாக 2011-ல் 62-வது இடத்தை பிடித்தார்.2010ல் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் சோம்தேவ் தங்கம் வென்றார். டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றார்.ஆசிய போட்டியில் இருந்து விலகினாலும், செர்பிய அணிக்கு எதிரான டெவிஸ் கோப்பை உலக சுற்று ஆட்டத்தில் சோம்தேவ் விளையாடுவார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி