அனுஷ்கா, சோனாக்ஷி உடன் ஐரோப்பா செல்லும் ரஜினி!…

விளம்பரங்கள்

சென்னை:-ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ திரைப்படம் ராக்லைன் வெங்கடேஷ் என்ற கன்னடப்பட தயாரிப்பாளரின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாரகி வருகிறது. தற்போது கர்நாடக மாநிலத்திலுள்ள ஷிமோகாவில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் லிங்கா படக் குழுவினர்.ஷிமோகா ஷெட்யூலை முடித்த பிறகு, இரண்டு பாடல் காட்சிகளின் படப்பிடிப்புக்காக ஐரோப்பா நாடுகளுக்கு விரைவில் பறக்கவிருக்கின்றனர்.

அங்கு எடுக்கப்படவிருக்கும் பாடல் காட்சிகளில் ஒன்று.ரஜினி அனுஷ்கா சம்மந்தப்பட்டது. மற்றொரு பாடல் காட்சி ரஜினி – சோனாக்ஷி சம்மந்தப்பட்டது. எனவே, ஐரோப்பா செல்லும் லிங்கா படக் குழுவில் ரஜினிகாந்த், சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஷெட்டி, கே.எஸ்.ரவிக்குமார், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஆகியோருடன் ஏகப்பட்ட நடனக்கலைஞர்களும் அங்கு செல்லவிருக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: