அசாருதினின் சாதனையை முறியடித்த கேப்டன் தோனி!…

விளம்பரங்கள்

பர்மிங்காம்:-இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டு அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.நேற்று நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் உள்ள தோனி அதிக ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை பெற்று சாதனை படைத்தார். இதற்கு முன் இந்த சாதனை முன்னாள் கேப்டன் அசாருதீன் வசம் இருந்தது.

1990 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை கேப்டன் பொறுப்பில் இருந்த அசாருதீன் 174 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 90 ஒரு நாள் போட்டிகளை வென்றிருந்தார். ஆனால் தற்போதைய கேப்டன் தோனி 162 போட்டிகளில் கேப்டனாக பொறுப்பு வகித்து 91வது வெற்றியை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: