செய்திகள் ரூ.1 கோடிக்கு தாயை தத்தெடுக்கும் சீன வாலிபர்!…

ரூ.1 கோடிக்கு தாயை தத்தெடுக்கும் சீன வாலிபர்!…

ரூ.1 கோடிக்கு தாயை தத்தெடுக்கும் சீன வாலிபர்!… post thumbnail image
பெய்ஜிங்:-சீனாவை சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் இணையதளத்தில் ஒரு விளம்பரம் கொடுத்துள்ளார். அதில் தான் ஒரு பெண்ணை தாயாக தத்தெடுக்க விரும்புவதாக கூறியுள்ளார்.அந்த பெண் 57 வயது இருக்க வேண்டும். அவருக்கு நல்ல கல்வி அறிவு இருக்க வேண்டும். போதை பொருள் பயன்படுத்துபவராக இருக்க கூடாது.

அவருக்கு வெளிநாடுகளில் பயணம் செய்த அனுபவம் இருக்க வேண்டும். தனக்கு தாயாக இருக்க அவருக்கு ரூ. 1 கோடி பணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.விளம்பரத்தின் அருகே பெரிய சிவப்பு விளக்கை பிடித்தபடி அவர் நிற்கும் புகைப்படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அவரது கையெழுத்து, போன் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி