செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ‘மேரி கோம்’ படத்திற்கு உத்திரப்பிரதேச அரசு வரி விலக்கு!…

‘மேரி கோம்’ படத்திற்கு உத்திரப்பிரதேச அரசு வரி விலக்கு!…

‘மேரி கோம்’ படத்திற்கு உத்திரப்பிரதேச அரசு வரி விலக்கு!… post thumbnail image
மும்பை:-பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தயாராகியுள்ள திரைப்படம் மேரி கோம்.இதில், நடிகை பிரியங்கா சோப்ரா வீராங்கனை மேரி கோம் ஆக நடித்துள்ளார். படத்தை தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரித்துள்ளார். அவருடன் இணைந்து வியாகாம் 18 மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஓமங் குமார் இயக்கியுள்ளார்.

வரும் 5ம் தேதி மேரி கோம் திரைப்படம் உலகம் முழுவதும் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று, வெண்கலப் பதக்கம் வென்ற மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த குத்துச் சண்டை வீராங்கனையான மேரி கோமை கவுரவிக்கும் விதமாக மேரி கோம் படத்திற்கு வரி விலக்கு அளித்து உத்திரப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி