அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் சீனா மீது பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு!…

சீனா மீது பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு!…

சீனா மீது பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு!… post thumbnail image
டோக்கியோ:-5 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று டோக்கியோ நகரில் இந்தியா மற்றும் ஜப்பான் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் சீனாவின் இந்த போக்கை வன்மையாக கண்டித்தார். ஆனால் நேரடியாக சீனாவின் பெயரை குறிப்பிடாமல் அவர் தனது கண்டனத்தை தெரிவித்தார்.நரேந்திர மோடி பேசுகையில் கூறியதாவது:-

இந்த 21-ம் நூற்றாண்டு ஆசியா கண்டத்துக்கு உரியதாக இருக்கும் என்பதை ஒட்டுமொத்த உலகமும் ஒப்புக்கொண்டு உள்ளது. ஆனால் இந்த 21-ம் நூற்றாண்டு எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு கேள்வி எனக்கு உள்ளது. இதற்கான விடையை நாம் தெரிவிக்க வேண்டும். இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான உறவில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்படுகிறது என்பதை பொறுத்தே இது அமையும்.
நமக்கு முன்னேற்றம் வேண்டுமா? அல்லது தங்கள் நிலப்பரப்பை விரிவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கூடிய ஆக்கிரமிப்பு மனப்பான்மை வேண்டுமா? என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு மனப்பான்மை ஒற்றுமையை சீர்குலைப்பதாக அமையும் என்பதை அனைவரும் உணரவேண்டும். புத்தரின் பாதையில் செல்பவர்கள் அபிவிருத்தியின் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். ஆனால் இன்னும் 18-ம் நூற்றாண்டு கால சிந்தனையில் இருப்பவர்கள் ஆக்கிரமிப்பு போக்குடன் நடந்து கொள்கிறார்கள். பிறருடைய கடல்பகுதியையும் உரிமை கொண்டாடுகிறார்கள்.

மனித குலத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அமைதியையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும் வகையில் இந்தியாவும் ஜப்பானும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் ஆகும். இது இந்திய-ஜப்பான் அரசாங்கங்கள் மற்றும் தலைவர்களின் பொறுப்பு மட்டும் அல்ல. இரு நாடுகளைச் சேர்ந்த தொழில் அதிபர்களுக்கும் இதில் முக்கிய பங்கு உள்ளது. இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு முழு பெரும்பான்மையுடன் கூடிய அரசு அமைந்து இருக்கிறது. 125 கோடி மக்களுக்கு தரமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு எங்கள் மீது சுமத்தப்பட்டு உள்ளது.
கடந்த 100 நாட்கள் ஆட்சியில் தொழில் வளர்ச்சிக்காக எங்கள் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நல்லாட்சிக்கே நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம். குஜராத் மாநிலத்தில் நான் முதல்-மந்திரியாக இருந்திருப்பதால் தொழில்துறையினருடன் எனக்கு நீண்டகால தொடர்பு உண்டு. இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 5.7 சதவீத வளர்ச்சியை நாங்கள் எட்டி இருக்கிறோம்.

அன்னிய நேரடி முதலீடு தொடர்பான விதிமுறைகளை எளிமைப்படுத்தி, தொழில் துறையில் நாங்கள் சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளோம். இந்த சீர்திருத்தங்கள் விரைவுபடுத்தப்படும். எனவே ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முன்வர வேண்டும். குறிப்பாக அடிப்படை கட்டமைப்பு, மாசற்ற எரிசக்தி ஆகிய துறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தொழில் தொடங்குவதற்கான அனுமதியை தாமதம் இன்றி விரைவாக வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.ஜப்பானில் இருந்து தொழில் முதலீடுகளை பெறும் வகையில், பிரதமர் அலுவலகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்படும்.இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.டோக்கியோ நகரில் உள்ள 136 ஆண்டுகள் பழமை வாய்ந்த தய்மே தொடக்கப்பள்ளிக்கூடத்துக்கு நரேந்திர மோடி சென்றார். அங்கு குழந்தைகளுடன் சிறிது நேரம் கலந்துரையாடிய அவர், அந்த பள்ளிக்கூடம் பற்றியும் அங்குள்ள கல்விமுறை பற்றியும் கேட்டு அறிந்தார். கடந்த 1923-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி அந்த பள்ளிக்கூடம் முற்றிலும் இடிந்து நாசமானதாகவும், பின்னர் அது புதுப்பிக்கப்பட்டதாகவும் அப்போது அவரிடம் ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், 2001-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பள்ளிக்கூடம் இடிந்து 400 குழந்தைகள் பலியானது பற்றி அப்போது குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இத்தகைய பேரழிவின் வலியை தான் உணர்வதாகவும் கூறினார்.அங்கு பேசுகையில், 136 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த பள்ளியின் முன்னாள் மாணவர் போல் தான் வந்து இருப்பதாக குறிப்பிட்ட அவர், ஜப்பானில் எந்த அளவுக்கு கல்வி முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. பள்ளிகளில் கல்வி நெறிமுறைகள், ஒழுக்கம் போன்றவை கற்பிக்கப்படும் விதத்தை தெரிந்து கொள்ள வந்ததாகவும் கூறினார்.அப்போது அதுபற்றிய விவரங்களை ஜப்பான் கல்வி துணை மந்திரி மேகாவா கெஹாய் அவரிடம் விளக்கி கூறினார்.
இந்தியாவில் சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தில் ஜப்பான் மொழி அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், ஆனால் அந்த பாடத்தை சொல்லிக் கொடுக்க திறமையான போதிய ஆசிரியர்கள் இல்லை என்பதால் ஜப்பான் ஆசிரியர்கள் இந்தியாவுக்கு வந்து பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வந்தாலும் வரவேற்க தயாராக இருப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.மேலும் ஆன்-லைன் மூலம் வகுப்புகளை நடத்தும் யோசனையையும் அவர் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி