செய்திகள்,திரையுலகம் சிவப்பு எனக்கு பிடிக்கும் (2014) திரை விமர்சனம்…

சிவப்பு எனக்கு பிடிக்கும் (2014) திரை விமர்சனம்…

சிவப்பு எனக்கு பிடிக்கும் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
எழுத்தாளர் யுரேகா தான் எழுதும் ஒரு நாவலுக்காக, பாலியல் தொழிலாளி சான்ட்ரா எமியை சந்திக்கிறார். அவர் இதுவரை தான் சந்தித்த விதவிதமான வாடிக்கையாளர்களைப் பற்றி சொல்கிறார்.ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை கதையாக எழுதும் யுரேகாவின் வாழ்க்கையில், பாலியல் தொடர்பான சோகம் இருப்பதைச் சொல்லி இருக்கிறார். ஒரு திரைப்படமாகவும் இல்லாமல், டாக்குமெண்ட்ரி படமாகவும் இல்லாமல், தட்டுத்தடுமாறி கரை சேருகிறது சிவப்பு எனக்கு பிடிக்கும் படத்தின் கதை.

பாலியல் தொழிலாளியாக சான்ட்ரா எமி நடித்துள்ளார். பாலியல் தொழிலாளிகளுக்கே உரிய மேனரிசம், பேச்சு எதுவும் இல்லாமல், சோகத்தைச் சுமக்கும் டி.வி சீரியல் கேரக்டர் போல் வந்து போகிறார். நடிக்கக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல், ஒருவித பயத்துடன் நடித்திருப்பது போல் தோன்றுகிறது.போலீஸ் இன்ஸ்பெக்டர், பாலியல் தொழில் புரோக்கர், பாலியல் தொழில் நடத்தும் பெண் ஆகிய கேரக்டர்கள் யதார்த்தமாக இருக்கிறது.பாலியல் தொழிலாளியின் படுக்கையறைக் காட்சிகளில் எந்த ஆபாசத்துக்கும் இடம் தராமல் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது. அந்த சூழ்நிலையின் தாக்கத்தை மறைமுகமாகவாவது உணர்த்தியிருக்கலாம்.

பாலியல் வன்முறைகள் பெருகி வருவதை தடுப்பதற்கு மும்பை, கொல்கத்தாவில் இருப்பது போல், சென்னையிலும் சிவப்பு விளக்குப் பகுதியை உருவாக்க வேண்டும். பாலியல் தொழிலை அங்கீகரிக்க வேண்டும். பள்ளிகளில் பாலியல் கல்வி கொண்டு வர வேண்டும்’ என்ற மூன்று நோக்கங்களை முன்னிறுத்தி, ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்க்கை மூலம் அதை வலியுறுத்தியுள்ளார் இயக்குனர் யுரேகா.பாலியல் தொழிலாளர்களின் வீடும், அவர்களின் வாழ்க்கை முறையும் யதார்த்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் தொழிலாளியின் அனுபவத்தை காட்சிக் கோர்வையாக்கி காட்டியிருப்பது. மேலும் சொல்ல வந்த கருத்தை இன்னும் ஆணித்தரமாக சொல்லவில்லை.

ஆக மொத்தத்தில் ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ விபரீதமான ஆசை…………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி