செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் சிவபெருமானுக்காக மனிதர்களால் உருவாக்கப்பட்ட முதல் குகைக் கோயில் ஆஸ்திரேலியாவில் திறப்பு!…

சிவபெருமானுக்காக மனிதர்களால் உருவாக்கப்பட்ட முதல் குகைக் கோயில் ஆஸ்திரேலியாவில் திறப்பு!…

சிவபெருமானுக்காக மனிதர்களால் உருவாக்கப்பட்ட முதல் குகைக் கோயில் ஆஸ்திரேலியாவில் திறப்பு!… post thumbnail image
மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியின் புறநகர் பகுதியான மிண்ட்டோவில் உலகிலேயே முதன்முதலாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட குகைக் கோயிலினுள் 4.5 மீட்டர் உயரமுள்ள பளிங்குக்கல்லினால் ஆன சிவபெருமானின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.’முக்தி குப்தேஸ்வரர் கோயில்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவபெருமானின் சிலை உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரனாசியில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.

ஒற்றை பளிங்குக்கல்லில் வடிக்கப்பட்ட இந்த அழகிய சிலை, சிவபெருமான் நான்கு கரங்களுடன் அமர்ந்திருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் பின்புறத்தில் நிமிடத்திற்கு ஒரு நிறம் என்ற வகையில் மிளிரும் கண்ணைக் கவரும் வண்ண விளக்குகள் காண்போரை பக்தி பரவசத்துக்குள்ளாக்குவதாக ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பக்தர்கள் குறிப்பிடுகின்றனர்.இந்தக் குகைக் கோயிலினுள் 1,128 சிற்றாலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன. குகையினுள் 10 அடி ஆழத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் ஒரு பெட்டகத்தில் உலகின் பலநாடுகளை சேர்ந்த சுமார் 20 லட்சம் பக்தர்கள் ‘ஓம் நமசிவாய’ என்று தங்கள் கைப்பட எழுதிய பிரதியும் வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி