வெடி குண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்!… நடிகர் அஜித் ரசிகர்கள் கண்டன போஸ்டர்…

விளம்பரங்கள்

சென்னை:-கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு திருவல்லிகேணியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பில் பேசிய மர்ம நபர், நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பைத் தூண்டித்துவிட்டார்.

இதையடுத்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் திருவான்மியூரில் உள்ள அஜித் வீட்டில் நள்ளிரவு சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் அங்கு எந்த வெடி பொருளும் சிக்கவில்லை. இந்நிலையில் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக் கோரி மதுரையில் அவரது ரசிகர்கள் கண்டன போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அதில், வெடி குண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்! சாவுக்கு பயந்தவனுக்கு தினம் தினம் சாவு, எதுக்குமே பயப்படாதவனுக்கு ஒரு தடவை தான் சாவு, எங்க தலயை தொடணும்னா. எங்களை தாண்டி தொட்டுப்பாருங்கடா பார்ப்போம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: