செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தில் இந்தியா!…

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தில் இந்தியா!…

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தில் இந்தியா!… post thumbnail image
துபாய்:-இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாட்டிங்காமில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றதன்முலம் 114 தரநிலைப் புள்ளிகளுடன் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய அணி, ஹசாரேவில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 31 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஆஸ்திரேலியாவை ஜிம்பாப்வே வீழ்த்தியது.
இதையடுத்து 3 தரநிலைப் புள்ளிகளை இழந்த ஆஸ்திரேலியா, தரவரிசையில் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எனவே முதலிடத்தில் இந்தியா மட்டும் உள்ளது. இந்திய அணி தற்போது 114 தரநிலைப் புள்ளிகளுடன் உள்ளது.

தென் ஆப்பிரிக்கா 113 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இலங்கை 11 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன. மீதமுள்ள போட்டிகளில் இந்தியாவின் வெற்றியைப் பொருத்தும், முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தின் தன்மையை பொறுத்தும் தரவரிசையில் மாற்றம் ஏற்படும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி