செய்திகள்,திரையுலகம் ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் ஆனார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!…

ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் ஆனார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!…

ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் ஆனார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!… post thumbnail image
சென்னை:-ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம், இந்திய மொழிகளில் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. கோச்சடையான் படத்தையும் தயாரித்தது இந்த நிறுவனம்தான். தற்போது இந்த நிறுவனத்தின் தென்னிந்திய தலைவராகி இருக்கிறார் சவுந்தர்யா ரஜினிகாந்த். தென்னிந்திய தலைவர் என்பதோடு. டிஜிட்டல் தொழில்நுட்ப பிரிவு தலைவர், கிரியேட்டிவ் இயக்குனர் மற்றும் திட்டமிடுதல் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

ஈராஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகரி ஜோதி தேஷ்பாண்டே சவுந்தர்யாவை எங்கள் நிறுவனத்துக்கு வரவேற்கிறோம். அவரது திறமையும் உழைப்பும் எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன்படும். ஈராஸ் டிடிஎச், ஐபிடிவி, பிராண்பேண்ட் போன்றவற்றில் களம் இறங்குகிறது. அவற்றை திறம்பட சவுந்தர்யா வழிநடத்துவார என்கிறார்.

ஈராஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். டிஜிட்டல் மற்றும் படைப்பாற்றல் செயல்முறைகளில் ஈராஸை மேம்படுத்ததுவேன். தொழில்நுட்பம், டிஜிட்டல் வாய்ப்புகளை ரசிகர்களின் தேவை அறிந்து பயன்படுத்துவேன். ஈராஸ் தயாரிப்பில் வரிசையாக படங்கள் வெளிவர இருக்கிறது. அவற்றில் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு உரிய பங்கு இருக்கும் என்கிறார் சவுந்தர்யா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி