ஹாலிவுட் பாடகியை மயக்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்!…

விளம்பரங்கள்

சென்னை:-ரோஜா படத்தில் இருந்து தனது இசைப்பயணத்தை தொடங்கிய ஏ.ஆர்.ரகுமான், ஆரம்பத்தில் தமிழக ரசிகர்களை தனது இசையால் மயக்கியவர், பின்னர் இந்திக்கு சென்று அங்குள்ள ரசிகர்களையும் மயக்கினார். அதையடுத்து, ஹாலிவுட்டுக்கு சென்று இசையமைக்கத் தொடங்கிய ஏ.ஆர்.ரகுமான், அங்கும் தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கி விட்டார்.

இந்நிலையில், அவரது இசையில் மயங்கிப்போன பல பாடகர்-பாடகிகள் அவரது இசையில் தாங்களும் பாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகிறார்களாம். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஹாலிவுட் பாப் பாடகி டைலர் ஸ்விப்ட். இவர் 4 முறை கிராமி விருதுகள் பெற்றிருப்பதோடு, தனது இனிய குரலால் ரசிகர்களையும் கவர்ந்திழுத்து வைத்திருக்கிறாராம்.

இவருக்கு ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் என்றால் ரொம்ப பிடிக்குமாம். அவரது இந்திய இசையை நான் பெரிதும் நேசிக்கிறேன். அவரது இசையைக் கேட்டு பலமுறை மயங்கிய எனக்கு அவரது இசையில் பாட வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் டைலர் ஸ்விப்ட். இதையடுத்து, ரகுமானும், தனது இசையில் பாட வருமாறு டைலர் ஸ்விப்டுக்கு அழைப்பு விடுத்துள்ளாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: