செய்திகள்,திரையுலகம் நடிகை அமலாவை கிண்டல் செய்த ரஜினி!…

நடிகை அமலாவை கிண்டல் செய்த ரஜினி!…

நடிகை அமலாவை கிண்டல் செய்த ரஜினி!… post thumbnail image
சென்னை:-மேற்கு வங்காளத்தை சேர்ந்த நடிகை அமலா, ரஜினியுடன் வேலைக்காரன், கொடி பறக்குது, மாப்பிள்ளை, கமலுடன் பேசும் படம், சத்யா, வெற்றி விழா என ஹிட் படங்களாக நடித்தபோது அவர் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது. அதோடு, தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வந்தார். அப்போதில் இருந்தே விலங்குகளிடம் அன்பு காட்டி வந்தாராம் அமலா.

அந்த சமயத்தில், அவர் நடித்துக் கொண்டிருந்த வேதம் புதிது படப்பிடிப்பு தளத்துக்கு ஒருநாள் சென்ற ரஜினி, அமலா விலங்குகள் மீது காட்டி வரும் பாசத்தை கிண்டலாக பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது நீங்களும் ஒரு காலத்தில் மனிதநேயம் கொண்டவர்களாக மாறுவீர்கள் என்று ரஜினியைப் பார்த்து சிரித்தபடியே சொன்னாராம், அமலா.

ஆனால் இப்போது 22 வருடங்களுக்குப் பிறகு ஒரு டிவித்தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் அமலா, தனது கடந்த காலத்தை புரட்டிப்பார்த்து, நான் சொன்னது போலவே ரஜினி, இப்போது மனிதநேயம் மிக்க மனிதராக மாறி விட்டார். நான் அன்றைக்கு அவரைப்பார்த்து சொன்னது இப்போது நடந்துள்ளது. மனிதர்களின் மனநிலையை காலமும், சூழ்நிலைகளும்தான் தீர்மானிக்கின்றன என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி