செய்திகள்,திரையுலகம் சலீம்(2014) திரை விமர்சனம்…

சலீம்(2014) திரை விமர்சனம்…

சலீம்(2014) திரை விமர்சனம்… post thumbnail image
ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டர் வேலை பார்க்கும் விஜய் ஆண்டனி மகாத்மா காந்தியின் கொள்கையின் படி நேர்மையானவராகவும், ஏழைகளுக்கு உதவி செய்யும், எந்த வம்புகளுக்கும் போகாத, சட்ட திட்டங்களை மதிக்கக்கூடிய நல்ல மனிதராக வாழ்ந்து வருகிறார்.அவருக்கும் நாயகி அக்ஷாவுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. விஜய் ஆண்டனியுடன் நெருங்கி பழகும் அக்ஷா, விஜய் ஆண்டனி ரொம்ப நல்லவராக இருப்பதால் அவர் தனக்கு ஒத்து வரமாட்டார் என முடிவு செய்து திருமணம் செய்ய மறுக்கிறார்.

இந்நிலையில் விஜய் ஆண்டனி வேலை செய்யும் மருத்துவமனை நிர்வாகம் செய்யும் தவறுகளுக்கு அவர் உடன்பட மறுப்பதால் வேலையையும் இழக்கிறார். ஒரே நாளில் வேலையையும் இழந்து, திருமணம் செய்ய இருக்கும் பெண்ணையும் தான் இழந்து நிற்பதற்கு காரணம் தனது நேர்மைதான் என்பதை புரிந்து கொண்ட விஜய் ஆண்டனி, ஒரே ஒருநாள் மட்டும் தனது நேர்மையான பாதையில் இருந்து விலகி அநீதியான பாதைக்கு மாறுகிறார். ஹோட்டல் ஒன்றிற்குச் செல்லும் விஜய் ஆண்டனி மத்திய அமைச்சரின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரை ஹோட்டல் ரூமில் கடத்தி வைக்கிறார்.விஜய் ஆண்டனி எதற்காக அமைச்சரின் மகனை கடத்துகிறார்..? போலீஸ் என்ன செய்யப்போகிறது..? அக்ஷாவை திருமணம் செய்து கொண்டாரா? என்பதை விறுவிறுப்போடு சொல்வதே படத்தின் மீதிக்கதை…

வழக்கமான ‘த்ரில்லர்’ கதையை, முதல்பாதியில் திரைக்கதையை மெதுவாக நகர்த்தியுள்ள, இயக்குனர் நிர்மல்குமார், இரண்டாவது பாதியில் விறுவிறுப்பாக கொடுத்துள்ளார். தன் முதல் படத்திலேயே பாரதிராஜாவின் பட்டறையிலிருந்து வந்தவர் என்பதை நிரூபித்திருக்கிறார் என்ற விதத்தில் இவரைப் பாராட்டலாம்.அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பினால் விஜய் ஆண்டனி முதல் படத்திலேயே யதார்த்தமான நடிப்பின் மூலம் நிறைய பாராட்டுக்களை வாங்கியவர். தன் இரண்டாவது படத்திலும் தனக்கான சரியான கதையை தேர்வு செய்து தெளிவாக அடியெடுத்து வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. முதலில் அப்பாவித்தனமாக கேரக்டரில் அறிமுகமாகி பின்னர் அவர் எடுக்கும் விஸ்வரூபம் அதிர வைக்கிறது.

நாயகி அக்ஷா பர்தாசானிக்கு அறிமுகப்படம் போன்றே தெரியவில்லை. அவருடைய கண்களே பல இடங்களில் பேசுகிறது. முதல்பாதியில் அதிக வேலையில்லை என்றாலும் இரண்டாவது பாதியில் நன்றாக நடித்துள்ளார். பாடல் காட்சிகளில் கவர்ச்சியாகவும் நடித்துள்ளார்.போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் அருள்தாஸ், மற்றும் அமைச்சர் கேரக்டரில் வரும் செழியன் ஆகியோர் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு த்ரில்லிங் படத்திற்கு தேவையான பின்னணி இசையை மிகக்கச்சிதமாக அமைத்துள்ளார் விஜய் ஆண்டனி. குறிப்பாக ‘மஸ்காரா’ என்றப் பாடல் அருமையாக உள்ளது. மேலும் அதிகாரவர்க்கத்திற்கு சாட்டையடி கொடுக்கும் கதையும், வசனமும் படத்திற்கு கூடுதல் பலம்..

ஆக மொத்தத்தில் ‘சலீம்’ திக்…திக்………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி